Page copy protected against web site content infringement by Copyscape

Google
WWW தொடுவானம் தூரமில்லை

Wednesday, October 24, 2007

17.சிற்றெரும்பு தோழர்களே!

என்னுள் "நான்" என்பது
பசிக்கொண்ட சிங்கம்தான்

ஒருபோதும் சிற்றெரும்புகளை
உண்டு பசியாற்றிக்கொண்டதில்லை

ஒருநாள் "நான்" என்னுள்
இறந்துபோகக்கூடும்

அப்பொழுது அந்தசிற்றெரும்புகள்
பசியாரிக்கொள்ள மறப்பதில்லை...

என் ஞானமும் அவ்வாறே
சிற்றெரும்பு தோழர்களே...

Tuesday, October 16, 2007

16. அழகே! அழகு!

எல்லாக் காலங்களிலும்
அழகானவைகள்
அழகானதாகவே
இருக்கும் என்றால்

உன்னால் மட்டும்
எப்படி
நாளைவிட குறைவாக
நேற்றைவிட அதிகமான
அழகாக, இன்று மட்டும்
காண்பிக்கமுடிகிறது

சகியே!

16.நீ நான் உலகம்

உன்னைத் தவிர
எல்லாம் அழகழகாக
தோன்றுதடி

நீ பேரழகியாக
நான் என்னியமுதல்...

Monday, October 15, 2007

14.பூவே

உன்
உதட்டு வரிகளில்
எதை எழுதிவைத்திருக்கின்றாய்

என்று
வண்டுகள்
இப்படிப் பறந்து பறந்து
படித்துக்கொண்டிருக்கின்றன,

Friday, October 12, 2007

நீங்கள்

உலகத்திற்கு வேண்டுமென்றால்
நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்;
ஆனால் யாராவது ஒருவருக்கு
நீங்களே உலகமாக இருக்கலாம்.

Thursday, October 11, 2007

உலகத்திற்கு !

சொற்ப இரண்டு
நாட்களிலேயே,
நாளை என்பது
நேற்று என்றாகி விடுகிறது
உலகத்திற்கு !