அப்போது..
நான்
கவிதையெழுதி
காதலிக்கவில்லை
அவளை
மனிதமந்தைகளின்
சூட்சமவலையில்
சிக்கிதவித்த போது
தாய்மடிவாசத்தை
அவள்மடியில்சுரந்தனள்
என்
எண்ணக்குதிரையை
எனக்கே அரியாமல்
விரட்டியடித்து,
வெற்றியின் சுவையை
அரியவவைத்தவள்
அவள்..
கனவு என்பதை
கவிதையாக
காணச்செய்தவள்...
புள்ளியில் தொடங்கி
அழகான கோலத்தில்
முடிக்கும் திறமையை
சிற்பியாக இருந்து
செதுக்கி ரசித்தவள்அவள்...
வெயிலின் அருமையை
வெயிலில் உணரச்சொன்னவளவள்..
கொட்டும்
ஒற்றை மழைத்துளியை
கயிரெனக்கொண்டு
வானமடையும் வித்தையை
சொன்னவள்..
என் மூச்சே
அவளென்றிருக்க
ஒருநாள்
அவள் சுவாசிப்பதை
நிறுத்திக்கொண்டாள்..
ஏன்? எதனால்?
என்று அறியும்
தைரியமில்லாமல்
காலத்தின்
கட்டளையாக
அவளின்
எண்ணக்குதிரையில்
பயணித்துக்கொண்டு...
எண்ணக்குதிரையில்
பயணித்துக்கொண்டு...
கவிதைகளும் எழுதுகின்றேன்
இப்போது..