எது புதைந்தது
என்று தெரியவில்லை
மனசெல்லாம்
வேர்பிடித்திருக்கின்றது...
பிடிங்கி எறிய
மனமில்லை என்றாலும்
நீரூற்றி வளர்க்க
ஏனோ மறுக்கின்றது.. மனம்!
இதயம் மார்பை விட்டு
வெளியே துடிப்பது போல்
அஞ்சி நடுங்குகின்றேன்..
வானம் பிளந்து
தலையில் வீழ்ந்திடுமோ
என்று தேம்பி அ௯ழுகின்றேன்..
திருவிழாக்கூட்டத்தின்
நடுவினிலும், தனிமையில்
தொலைந்துபோகின்றென்...
ஆகாரம் கூட எனக்கு
ஆதாரமற்று போனது..
என் வாழ்க்கை
நிமிடமுட்கள்
நகர்ந்து நகர்ந்து
காயங்களையே
காலங்கலாக்கின...
இதுவரை
மற்றவர்களின்
தேவைகளரிந்து
செய்துவந்த
உதவிகள் கூட
செய்ய மனமில்லாமல்
காரணங்களை தேடுகின்றது மூளை..
நான் பேசுவதை
என் காதுகள்
மட்டுமே கேட்கின்றது
மொழியினை உமையாக்கி...
தூரத்து அருகினில்
தொலைந்துபோகின்றன
அருகினில் உள்ளவைகள்..
நான் எதைத்தொலைத்துவிட்டேன்
என்று தெரியாதபோதும்
தேடல் எனக்கு பிடித்திருக்கின்றது..
ஒற்றை நீர்த்துளியாக இருந்தாலும்
மழையெனப் பெய்துவிடுகின்றது
என்னுள் ...
இதுவரை
உண்மை மட்டுமே
பேசியவள் இல்லை என்றாலும்
பொய் சொல்வது
பாவமாகத் தெரிவதில்லை..
விட்டில் பூச்சியாக
ஒளியில் அகப்பட்டாயே என்று
உள்ளுணர்வு சொன்னாலும்
இந்த ஒளியின் வீச்சிலிருந்து
விளகிக்கொள்ள மனமில்லை எனக்கு...
சூட்சம உலகினில்
சூழ்நிலைக்கைதியாக
ஒட்டிய அறையினில்
அடைந்துக்கிடப்பது
எதனால் என்று
தெரியவில்லை என்றாலும்..
அடைந்துக்கிடப்பது
பிடித்திருக்கின்றது...
என்னுள் வேர்பிடித்த
ஏதோ ஒன்றின் ஆணிவேரில்,
ஆதாரமாக இருக்கும்
ஏதோ ஒன்றினை
கண்டுகொள்ள நினைத்தாலும்
கண்ணீர்த்துளிகளையே
கன்னங்களில் பாய்சுகிறது
என் கண்கள்..
இப்போதும்
அந்த ஆணிவேர்
மற்றுமொரு
சல்லிவேரினை
முளைந்தெடுத்திருக்கும்
இத்தருணத்தில்.....
No comments:
Post a Comment