Page copy protected against web site content infringement by Copyscape

Google
WWW தொடுவானம் தூரமில்லை

Wednesday, May 30, 2007

12.கவிதை எழுதி கவிஞனாகி !

வண்ணங்கள்
போதவில்லை என்றா

வானவில்லில்
உன் வண்ணம்

மேகங்கள்
இல்லையென்றா

உன் கார்கூந்தல்
வானில்

நவமணிகள்
நாட்டிலில்லை என்றா

கண்மணிகள்
உன் உடம்பில்

தென்றலுக்கு
குளிர்ச்சியூட்டவா

வெளிவிடுகின்றாய்
உன் சுவாசங்களை

பூவினங்களுக்கு
மோச்சம்க் கிட்டவா

நீ தலைவாரி
பூச்சூடினாய்

நட்த்திரங்கள்
ஒளிபெறவா

நொடிப்பொழுதும்
கண்சிமிட்டுகிறாய்

அதிசயங்களில்
இடம் பெறவா

நடைபாதையில்
சுவடுகளை விட்டுவிடுகிறாய்

பெண்னினத்தில்
அழகி இல்லையென்றா

நீ உன்னை
படைத்துக்கொண்டாய்

எப்படி முடிப்பதென்று அரியாமல்
இப்படியே முடித்துவிடுகின்றேன்

நான்
கவிதை எழுதி
கவிஞனாகியதற்கு

உனக்கு
நன்றி.

11.ஒரு காதலன் கவிஞனாகின்றான்!

உன்னிடம் காதல் சொல்ல
ஒற்றை ரோஜாவோடு
வீட்டைவிட்டு வெளியேரிய போது

போர்கள உலகமும்
வாளேந்திய வீரர்களையும்

வீதீயின் நடுவே கண்டுகொண்டேன்

பயம் தைரியத்தை புதைத்தது
மனம் தோல்வியை தழுவிக்கொண்டது

ஆரத்தழுவிய ரோஜாமுட்கள்
விரல்களில் குத்தி ரத்தத்துளிகளை
எனக்கு பரிசளித்தது

சரி இனி என்செய்ய?

நீ என்னுள் விதைத்து விட்ட
கவிதைகளுக்கு நீரூற்றி
காதலித்துவிட முடிவெடுத்துவிட்டேன்

ஒரு காதலன்
கவிஞனாகின்றான்!

உன்னாலே.

Wednesday, May 23, 2007

10.தகரம்

எப்படிதான்
கண்டுகொள்கிறதோ

காட்டாறென
கடந்து செல்லும்
கூட்டத்தின் நடுவினில்

என்
கண்கள் உன்னை

சரிதான்
காந்தத்தின் ஈர்ப்புக்கு
முன்னால்

தகரம்
தப்பிக்கவாமுடியும்

Monday, May 21, 2007

9.தட்டாம்பூச்சி

என்னுள்

உனக்காக
காத்துக்கிடக்கும்
தருணங்களில்
எல்லாம்

சிறுவயதில் தட்டாம்பூச்சி
பிடித்த அனுபவங்களே
ஆழுமைசெய்கின்றன

8.மழைத்துளி

அந்ந மழைக்கால
சந்திப்புக்கு பின்

ஒவ்வொரு மழைத்துளியும்
உன் நினைவுகளில்
என்னை
வானத்திலிருந்து
விழச்செய்கிறது.

Friday, May 18, 2007

7.ஒருத்தி

என் கவிதைகள்
தவம்கிடந்து
வரமொன்று
பெற்றுக்கொண்டது
கடவுளிடம்

என்னவளை தவிர
இனி அழகிகளை
படைத்துவிட வேண்டாம்
என்று

யார் ஒருவரும்

உலகத்திலே நீ ஒருத்திதான்
அழகானவள்
என
வர்ணிக்க கூடாதென்பதற்காக.

Thursday, May 17, 2007

6.தனிமை

நீ ஒற்றை எழுத்தாக
இருந்தாலும்

என்னால் வாக்கியமாகதான்
வாசிக்க முடிகிறது

இது எதனால்? என்று
புரியாத வேளையின்
தனிமையும்
புத்தகமாகத்தான்
தெரிகின்றது.

5.அதே கண்கள்.

உன்
வருகைக்காக
காத்திருத்த
கண்கள்

கண்டப்பின்
கடந்துச் செல்லும் வரை
நிலத்தையே
பார்த்தது

அதே கண்கள்.

Tuesday, May 15, 2007

4.வீதி உலா

வெளிச்சங்களை
விட்டுவிடு

பாவம்
இருட்டை
தேடிப்பிடித்து
ஓளிந்துகொள்கிறது

சொன்னதை கேட்காமல்
வீதி உலா வந்துவிடுகிறாய்
பகலில் நீ.

Sunday, May 13, 2007

3.பூமரம்

உனக்காக
காத்துகிடக்கின்றேன்
அதே சாலையோர
இருக்கையில்

இன்றும்
பூத்திருக்கின்றது
எனக்கு பின்னால்
பூமரம்.

Thursday, May 10, 2007

2.குறங்கு மனசு

மனசை அன்பில்
வார்த்தெடுத்து
வசதியாக வாசலில்
வைத்தப் போதுதான்

அன்புக்குரியவர்களின்
அரவணைப்பை
அறிந்து கொண்டது
குறங்கு மனசு.